கல்வி அமைச்சு

கல்வி தொடர்பான கொள்கைகளில் பெற்றோரின் கருத்துகளை அறிய கல்வி அமைச்சு விரும்புகிறது. இதற்காக புதிய ஆய்வு முயற்சி ஒன்றை கல்வி அமைச்சு தொடங்கியிருக்கிறது. அதன்படி பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர்கள் முக்கிய கல்விக் கொள்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ள முடியும்.
அடுத்த ஆண்டு புதிய பள்ளியாண்டு தொடங்கும்போது 52 பள்ளிகள் புதிய தலைமை ஆசிரியர்களைப் பெற்றிருக்கும்.
பள்ளிகளில் வழங்கப்படும் இணைப்பாட நடவடிக்கைகளுக்கு அப்பால் வெளியே கூடுதல் நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு வகைசெய்ய கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இது பொருந்தும்.
வேகமாக மாறிவரும் உலகில் மாணவர்கள் வெற்றிபெற, தொழில்நுட்பத்தின் மூலம் கல்வியை உருமாற்றுதல், மாணவர்களின் கற்றல் அனுபவங்களைச் செறிவூட்டும் வகையில் பள்ளிச் சூழல்களைப் புதுப்பித்தல், 21ஆம் நூற்றாண்டுத் திறன்களை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களைக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் புதன்கிழமையன்று அறிவித்தார்.
வரும் திங்கட்கிழமை 11ஆம் தேதியிலிருந்து தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் கட்டங்கட்டமாகத் தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிறப்புத் ...