லீ குவான் இயூ

திரு லீ குவான் இயூவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையில், அவரும் அவரது தலைமுறையைச் சேர்ந்த தலைவர்களும் சாதித்ததை சிங்கப்பூர் நினைவில்கொள்ள வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி உள்ளார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் படம் நீர்ப்புட்டி ஒன்றில் பயன்படுத்தப்பட்டது மரியாதைக்குரியது என்று கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூரைச் செதுக்கிய சிற்பியான லீ குவான் இயூ எப்போதும் சிங்கப்பூரின் வருங்காலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார் என்றும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களை நாம் எப்போதும் மறக்கக்கூடாது என்று திரு லீ இளையர்களிடம் வலியுறுத்துவார் என்றும் உள்துறை, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் துணையமைச்சர் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் கூறினார். 
திரு லீ குவான் இயூவுக்காகத் தம் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருந்ததாக அவரின் மெய்க்காவலராக இருந்த 83 வயது கருப்பையா கந்தசாமி குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி சிங்கப்பூர் முழுவதும் சனிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.