சிங்கப்பூர்

பாலின சமத்துவம் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் உலக அளவில் எட்டாவது இடத்தில் உள்ளது. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அது முதலிடத்தில் உள்ளது.
பிரதமர் லீ சியன் லூங், எப்போதும் ஊக்கத்துடன் செயல்படுபவர் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் கலை அரும்பொருளகம் தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. அருங்காட்சியகம் செயல்பட்டுவரும் இடத்தை தற்போதைக்கு மாற்றும் திட்டமில்லை எனக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கலைத்துறைக்கான நாடாளுமன்ற நியமன உறுப்பினர் உஷா சந்திரதாசின் கேள்விக்கு புதன்கிழமை (மே 8) எழுத்துபூர்வமாக பதிலளிக்கும்போது தெரிவித்தார்.
மலிவுக் கட்டண விமானச் சேவையான ஸ்கூட், அண்மைய விமானச் சேவை இடையூறுகளுக்கு விநியோகச் சங்கிலிப் பிரச்சினைகளால் ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் பற்றாக்குறையே காரணம் என்று கூறியுள்ளது.
2021ல் கொள்ளைநோய்க்கு எதிராக சிங்கப்பூர் போராடிக் கொண்டிருந்த சமயத்தில் தடுப்பூசிக்கு எதிரான ‘ஹீலிங் த டிவைட்’ என்ற இயக்கத்தைத் தொடங்கிய ஐரிஸ் கோ, தடுப்பூசி நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களைத் தொந்தரவு செய்யுமாறு தமது 3,700க்கும் மேற்பட்ட குழு உறுப்பினர்களை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.