பட்ஜெட் 2024

வரவுசெலவுத் திட்டம் 2024ல் இடம்பெற்றுள்ள ஆதரவுத் திட்டங்கள், சிங்கப்பூரர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் நோக்கிலேயே அறிவிக்கப்பட்டுள்ளன என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
பெரும் சத்தத்தால் அண்டை வீட்டாருக்கிடையே ஏற்படும் சண்டைகளைக் கையாள புதிய சட்டங்களை முன்வைப்பதற்கான திட்டங்கள், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே பரவக்கூடிய கிருமிகளின் தொடர்பில் ஆய்வு நடத்த நிதி ஒதுக்கீடு போன்றவை செவ்வாய்க்கிழமையன்று (5 மார்ச்) நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டன.
பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) 2030ஆம் ஆண்டு வரை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூர் தனது பொருளியல் வளர்ச்சியைத் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.
மத்திய சேமநிதியில் (மசேநி) 55 வயதையும் தாண்டியோரின் சிறப்புக் கணக்குகளை மூடி, வழங்கப்படும் வட்டித் தொகையைக் குறைப்பது அரசாங்கத்தின் எண்ணம் இல்லை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் புதன்கிழமையன்று (28 பிப்ரவரி) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.