வளர்ச்சி

அடுத்த இரு ஆண்டுகளில் சிங்கப்பூர் பொருளியல் வேகமாக வளர்ச்சியடையும் என ஏடிபி வங்கி ஏப்ரல் 11ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. நாட்டின் வலுவான ஏற்றுமதி திறன் இதற்கு முக்கிய காரணமாக அமையும் என்றும் அதே வேளையில் பணவீக்கம் குறையும் என்றும் அவ்வங்கியின் அறிக்கை குறிப்பிட்டது.
ஹாங்காங்: சீனப் பொருளியல் இந்த ஆண்டு (2024) 5.3 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தனியார் வீட்டு விலை இந்த ஆண்டின் (2024) முதல் காலாண்டில் மிதமடைந்துள்ளது.
லண்டன்: இங்கிலாந்து பொருளியல் இவ்வாண்டுத் தொடக்கத்தில் மீண்டும் வளர்ச்சி பாதைக்குத் திரும்பியது. கடந்த ஆண்டின் பிற்பாதியில் மந்தநிலைக்குச் சென்ற அந்நாட்டின் பொருளியல் தற்போது மீட்சி கண்டு மீண்டும் வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வத் தரவுகள் காட்டுகிறது.
சிங்கப்பூரின் உற்பத்தித் துறை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 1.1 விழுக்காடு வளர்ச்சிகண்டது.