எடப்பாடி பழனிசாமி

சென்னை: இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையங்களைத் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என்று தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி (படம்) வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குப்பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரை, அதிமுகவினர் மிகுந்த விழுப்புடன் இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
“அதிமுக வேட்பாளர்களும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும் மட்டுமல்லாமல், அதிமுக கூட்டணி சார்ந்த அனைத்து நிர்வாகிகளும் வாக்குச்சாவடி முகவர்களும் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்,” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர்: தமிழகம் தற்போது போதைப் பொருள்களின் கூடாரமாகிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆணவத்தோடு பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எச்சரித்துள்ளார்.
விருதுநகர்: “வரும் 2026ஆம் ஆண்டில் அதிமுக, -தேமுதிக, ஆட்சி அமைய வேண்டும். பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்” என, விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.
நீலகிரி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.