லீ குவான் இயூ

சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டில் மலேசியாவிடமிருந்து பிரிந்து தனிநாடாவதைப் பற்றி அறிவித்தபோது திரு லீ குவான் யூ கண்ணீர் வடித்தார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த பெரும் வரவேற்பால் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் வாழ்க்கை வரலாற்றை விமரிசையாக சித்திரிக்கும் ‘லீ குவான் யூ: ஓர் அனுபவம்’ அனுபவக் கண்காட்சி மார்ச் 17ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
நாணய சேகரிப்பாளரான 72 வயது திரு ஆண்டியப்பன், டிபிஎஸ் வங்கியின் மூன்று கிளைகளுக்குச் சென்ற பிறகுதான் எட்டு $10 லீ குவான் யூ நூற்றாண்டு (எல்கேஒய்100) நினைவு நாணயங்களைப் பெற முடிந்தது.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய நூலக வாரியம், அரசாங்க சேவை மன்றத்துடன் (சிவில் சர்விஸ் கிளப்) இணைந்து, 1965ஆம் ஆண்டு அவர் சில மாத காலம் தங்கி நேரம் செலவிட்ட ‘சாங்கி காட்டேஜில்’ நாட்டை உருவாக்கிய திரு லீயின் சுயசரிதை மேற்கோள்களால் நிறைந்த முனையை நிறுவியுள்ளது.
டிசம்பர் 4 முதல் டிசம்பர் 31 வரை பொதுமக்கள் 142 வங்கிக் கிளைகளுக்குச் சென்று லீ குவான் யூ நினைவு சிறப்பு நாணயங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.