குடிநுழைவு

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக ஐந்தாவது முறை நுழைந்த இந்தோனீசிய ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
புனிதவெள்ளியை ஒட்டிய நீண்ட வாரயிறுதியில், உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளை காரில் கடந்துசென்ற 64 விழுக்காட்டுப் பயணிகள், கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையை நிறைவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் சிங்கப்பூருடனான இரண்டு நிலவழிச் சோதனைச் சாவடிகளை நாள்தோறும் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பிருந்த நிலையைவிட அதிகரித்திருப்பதாக மலேசிய குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் மார்ச் 25ஆம் தேதி தெரிவித்துள்ளது.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் கார் பயணிகள் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையை நிறைவேற்றும் வசதியை, கடந்த இரு நாள்களில் 86,000 பேர் பயன்படுத்தியுள்ளனர்.