இரண்டாவது கொவிட்-19 மாத்திரைக்கு இடைக்கால அங்கீகாரம்

சிங்கப்பூரில் இரண்டாவது கொவிட்-19 மாத்திரைக்கு இடைக்கால அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இலேசானது முதல் மிதமான கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 18 மற்றும் அதற்குமேல் வயதுடையோருக்குச் சிகிச்சை அளிக்க ‘மோல்னுபிரவிர்’ எனும் அம்மாத்திரையைப் பயன்படுத்தலாம்.

‘மெர்க்’ நிறுவனத்தின் தயாரிப்பான அம்மாத்திரை ‘லெகெவ்ரியோ (Lagevrio)’ எனும் பெயரில் விற்கப்படும்.

கிருமிப்பரவல் காலகட்டத்திற்கான சிறப்பு நடைமுறையின்கீழ் ‘மோல்னுபிரவிர்’ மாத்திரைக்கு இடைக்கால அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடுமையான கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயமிருப்பினும் மருத்துவ ரீதியில் வேறு பொருத்தமான கொவிட்-19 சிகிச்சைத் தெரிவுகள் இல்லாத பட்சத்திலும் அம்மாத்திரையைப் பயன்படுத்தலாம் என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அறிகுறிகள் தென்பட்ட ஐந்து நாள்களுக்குள் அம்மாத்திரை கொடுக்கப்பட வேண்டும். ஐந்து நாள்களுக்குமேல் அதனை உட்கொள்ளக்கூடாது.

கர்ப்பிணிகள், தாய்ப்பாலூட்டும் பெண்கள், 18 வயதிற்குக் குறைந்தோர் ஆகியோருக்கு ‘மோல்னுபிரவிர்’ மாத்திரை பரிந்துரைக்கப்படவில்லை.

பொதுவாக, இம்மாத்திரையை உட்கொள்வோரிடத்தில் இலேசான வயிற்றுப்போக்கு, குமட்டல், தலைச்சுற்றல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்பதை மருத்துவ ஆய்வுகள் காட்டுவதாக ஆணையம் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!