விரிவாக்கம் கண்ட ‘விடிஎல்’ திட்டம்: ஜோகூர் செல்லும் சிங்கப்பூரர்கள்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே விரிவாக்கம் கண்டுள்ள தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான தரைவழிப் பயணத் திட்டம் (விடிஎல்) திங்கட்கிழமை (டிசம்பர் 20) நடப்புக்கு வந்தது.

முதல் நாளான இன்று சிங்கப்பூரர்கள் பலர் உற்சாகத்துடன் எல்லையைக் கடந்து மலேசியாவுக்குச் சென்றனர்.

அவர்களில் திருமதி பியாங் லீ சானும் ஒருவர். ஜோகூரில் உள்ள குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக இணையத்தில் எட்டு மணி நேரம் காத்திருந்தது பேருந்து பயணச்சீட்டை அவர் வாங்கி இருந்தார்.

இல்லத்தரசியான திருமதி பியாங், 40, அவரது கணவர் பாங் யீ ஹாவ், 42, ஆகிய இருவரும் மலாக்காவில் உள்ள குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்துவதற்காக இன்று புறப்பட்டுச் சென்றனர். கொவிட்-19 கிருமி பரவத் தொடங்கிய பிறகு முதல் முறையாக அவர்கள் தங்களுடைய குடும்பத்தினரைச் சந்திக்கின்றனர்.

“என்னுடைய குழந்தைகள் துள்ளிக் குதித்துக் கொண்டாடுகின்றனர். பேருந்துச் சீட்டு கிைடத்ததா என்று கேட்டுக்கொண்டே இருந்தனர்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் சிங்கப்பூரரான திருமதி பியாங் தெரிவித்திருந்தார். அவரது கணவர் மலேசியர்.

விரிவுபடுத்தப்பட்டுள்ள தரைவழி ‘விடிஎல்’ திட்டத்தின்கீழ், தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள் கடற்பாலம் வழியாக மலேசியாவுக்குச் செல்லலாம். அங்கு சென்றதும் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

இதே ஏற்பாட்டின்கீழ் மலேசியர்களும் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்கு முன்னர், குடிமக்களும் நிரந்தரவாசிகளும் நீண்டகால அனுமதி பெற்றவர்களும் மட்டும் ‘விடிஎல்’ வழியாக தங்களுடைய நாட்டுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்ட பிறகு 50 விழுக்காடு கூடுதலாக பயணச்சீட்டுகளை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக டிரான்ஸ்டார், காஸ்வேலிங்க் ஆகிய இரு பேருந்து நிறுவனங்கள் தெரிவித்தன.

பயணச்சீட்டுகள் முழுமையாக விற்கப்பட்டால், நாள்தோறும் 4,320 பேர் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தனிமைப்படுத்தல் இன்றி பயணம் மேற்கொள்ள முடியும்.

உட்லண்ட்ஸ் தற்காலிக பேருந்து நிலையத்தில் உள்ள ‘டிரான்ஸ்டார்’ பேருந்து நிலையத்திலும் குவீன் ஸ்திரீட்டில் உள்ள ‘காஸ்வே லிங்க்’ பேருந்து நிலையத்துக்கும் இன்று காலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு சென்றபோது, நீண்ட வரிசையில் பலர் காத்திருந்ததைக் காண முடிந்தது.

பெரும்பாலான பயணிகள் மலேசியா செல்வதற்குத் தேவையான தடுப்பூசிச் சான்றிதழ், பயணத்துக்கு முந்திய ‘தொற்று இல்லை’ என்பதைக் காட்டும் பரிசோதனை முடிவுகள் போன்ற ஆவணங்களை கையில் வைத்திருந்தனர்.

ஆனால், ஜோகூருக்குச் செல்லும் பயணிகளில் 80 முதல் 90 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள் அல்லர் என்று டிரான்ஸ்டார் டிராவல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எல்சன் யாப் தெரிவித்தார்.

மலேசியாவில் குடும்ப உறுப்பினர்கள் உடைய சிங்கப்பூரர்கள் அங்கு செல்வதாகவும் அவர் சொன்னார். மிகச் சிலரே பொழுதுபோக்குக்காக மலேசியா செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!