பெரும் பாறைகளின் சரிவில் இருந்து நூலிழையில் தப்பித்த கிராமம்

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு கிராமம் பெரும் பாறைகளின் சரிவில் இருந்து நூலிழையில் தப்பித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் கிழக்குப்பகுதியில் பிரென்ஸ் கிராமம் உள்ளது.

இன்செல் மலையில் பாறைச் சரிவு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டதால் அந்த கிராமத்தில் இருந்த 84 பேர் மே 12ஆம் தேதி அங்கிருந்து வெளியேறினர். 

வியாழக்கிழமை ( ஜூன் 15) இரவு இன்செல் மலையின் பெரும் பகுதி தரைமட்டமானது. 1.5 மில்லியன் டன்னுக்கும் அதிகமான பாறைகள் கிராமத்தை நோக்கி உருண்டு வந்தன. 

வெள்ளிக்கிழமை காலை சம்பவ இடத்தை ஆராய்ந்த அதிகாரிகள் கிராமம் சரிவில் இருந்து தப்பித்துவிட்டதாகக் கூறினர். 

மலையில் இருந்து சரிந்த அந்த பாறைகளால் அந்த கிராமமே வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கக்கூடும் என்று தெரிவித்தனர். 

பாறைகள் கிராமத்தின் பள்ளிக்கு முன் வந்து நின்றுவிட்டன. 

மலையால் இனி எந்த ஆபத்தும் இல்லை. இருப்பினும் மக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக வேறு இடங்களில் தங்கியிருந்த கிராமத்து மக்கள் தற்போது சொந்த வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!