உலக சுகாதார நிறுவனம்

வா‌ஷிங்டன்: வட காஸாவில் முழுவீச்சில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாட்டு சபை உணவுத் திட்டத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
மணிலா: கொவிட்-19 கிருமிப் பரவலின்போது, அதிக அளவில் ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள் பயன்படுத்தப்பட்டதால் நுண்ணுயிரிகளைக் கட்டுப்படுத்தும் அவற்றின் திறன் குறைந்திருக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
கோப்பன்ஹேகன்: பதின்ம வயதினரிடையே மதுபான, மின்சிகரெட் பழக்கம் அதிகமாக இருப்பது அதிர்ச்சி தரும் வண்ணம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்: கொவிட்-19 கிருமியின் அண்மைய திரிபு, சளிக்காய்ச்சல் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைக் குறைவானோரே போட்டுக்கொள்வதால், இந்தக் குளிர்காலப் பருவத்தில் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கெய்ரோ: காஸாவின் அல் ஷிஃபா மருத்துவமனைக்கு நோயாளிகள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில் அங்கு அவர்களைப் பராமரிக்கக் குறைவான மருத்துவ ஊழியர்களே இருப்பதாகவும் ரத்த வங்கியில் கையிருப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.