போதைப்பொருள் கடத்தியவர் வழக்கில் பரிவு காட்டும்படி சிங்கப்பூர் பிரதமருக்கு மலேசியப் பிரதமர் கடிதம்

கோலாலம்பூர்: போதைப்பொருள் கடத்தலுக்காக சிங்கப்பூரில் இந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் மலேசியரின் வழக்கில் பரிவு காட்டுமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் லூங்கிடம் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக்கொண்டுள்ளதாக பெர்னாமா செய்தியை மேற்கோள்காட்டி ‘த ஸ்டார்’ இணையச் செய்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் லீக்கு பிரதமர் இஸ்மாயில் கடிதம் எழுதி இருப்பதாக அச்செய்தி கூறியது.

நாகேந்திரன் கே.தர்மலிங்கம், 33, எனப்படும் அந்த ஆடவரின் மரண தண்டனை விவகாரம் அண்மைய வாரங்களாக அனைத்துலகக் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அவர் அறிவாற்றல் குறைபாடு உள்ளவர் என்பதைக் காரணம் காட்டி மரண தண்டனையை நிறுத்துமாறு மனித உரிமைக் குழுக்களும் மற்ற அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், நாகேந்திரனின் மரண தண்டனையை நிறுத்தி வைப்பதில் சிங்கப்பூர் அரசாங்கம் கவனம் செலுத்தவும் அதிபருக்கு புதிய கருணை மனு அளிக்க வாய்ப்பு வழங்கவும் திரு இஸ்மாயில் கோரிக்கை விடுத்திருப்பதாக பெர்னாமா இன்று தெரிவித்தது.

42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடந்தி வந்ததற்காக 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் அதிகாரிகளால் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.

தமது தொடையில் போதைப்பொருளை பொட்டலமாகக் கட்டி மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அவர் பிடிபட்டார்.

நாகேந்திரனுக்கு 2010 நவம்பரில் சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

அதிபருக்கு அவர் அனுப்பிய கருணை மனு 2020 ஜூனில் நிராகரிக்கப்பட்டது.

அவருக்கு மரண தண்டனையை வரும் புதன்கிழமை (நவம்பர் 10) நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!