பெஞ்சூரு கேளிக்கை நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் அட்டகாசமான பொங்கல்

இரண்டு ஆண்டுகளாக பெரும்பாலும் அமைதிகாத்த பெஞ்சூரு கேளிக்கை நிலையத்தில் பொங்கல் திருநாள் மாலையில் ஆரவாரத்துடன் உயிர்த்து எழுந்தது.  

வெளிநாட்டு ஊழியர்களுக்கான கேளிக்கை நடுவமான பெஞ்சூரு நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 14) மாலை நடைபெற்றதே அதற்குக் காரணம். 

கியேட் ஹோங் இளையர் குழு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் காற்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுடன் ஆடல் பாடல் அங்கங்கள் இடம்பெற்றன. 

திரும்பிய பக்கம் எல்லாம் நடவடிக்கைகள். 

ஆனால் சமூக இடைவெளி காப்பதில் கவனமாய் இருந்தனர் ஊழியர்கள். 

 

1,600க்கும் அதிகமான ஊழியர்களுக்கு முகக்கவசங்களும் கை சுத்திகரிப்பானும் கொண்டுள்ள அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம். 

பொங்கல் நன்றியுணர்வை கற்றுத் தரும் அருமையான திருநாள் என்று அவர் குறிப்பிட்டார். 

“இச்சமயத்தில் ஊழியர்களுடன் சிங்கப்பூரர்கள் துணை நிற்கின்றனர். எல்லோரும் ஒரு மக்களாக கிருமிப்பரவலை எதிர்கொள்வோம்” என்று திரு ஸுல்கர்னைன் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியை நடத்த மாணவர்களின் கரங்கள் ஒன்றுசேர்ந்ததாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் முகம்மது மாலிக் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“வெளிநாட்டு ஊழியர்கள் எங்களது முயற்சிகளைப் பாராட்டும்போது நாம் பேருவகை அடைகிறோம்,” என்றார் திரு மாலிக்,
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!