ராசிபலன்

மிதுனம்

இன்றைய பலன்:

சோர்வு, சோம்பல் எட்டிப் பார்க்கலாம். எக்காரணத்தை முன்னிட்டும் முக்கியப் பணிகளை ஒத்திப் போடக் கூடாது. இறுதி வரை முயற்சிகளை தொடர்ந்தீர்கள் எனில் எதிலும் வெற்றி உங்கள் வசமாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 7.
நிறம்: ஊதா, பொன்னிறம்.

 

வார பலன் : 1-3-2020 முதல் 7-3-2020 வரை

அன்புள்ள மிதுன ராசிக்காரர்களே,

உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தில் கால்பதிக்கும் சுக்கிரனின் சுபத்தன்மை மேம்படும். இங்குள்ள சந்திரனும் அனுக்கிரகம் புரிவார். 7ஆம் இட குரு, 8ஆம் இட வக்ர புதன், 9ஆம் இட சூரியன் யோகப் பலன்களைத் தருவார்கள். ராசியிலுள்ள ராகு, 7ஆம் இட கேது, செவ்வாய், 8ஆம் இட சனி வகையில் தொல்லைகள் இருக்கும்.

எதற்கும் அதிகம் ஆசைப்படாத பக்குவசாலிகள் என உங்களைக் குறிப்பிடலாம். அடுத்து வரும் நாட்களில் உங்களது உடல்நலம் சிறப்பாக இருக்கும். எதிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஓயாது உழைப் பீர்கள். ஈடுபடும் பணிகளில் பலவற்றை திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் முடித்து ஆதாயம் காண்பீர்கள். ஒருசில வேலைகள் மட்டும் ஆமை வேகத்தில் நகரும். சொத்துகள் வாங்கும் விற்கும் முயற்சிகளை வேகப்படுத்தலாம். வரவுகளுக்குப் பஞ்சமில்லை.

கடந்த கால கடன் சுமையில் இருந்து விடுபடுவது மனதில் புதிய உற்சாகத்தைத் தரும். முன்பே நிச்சயிக்கப்பட்ட சுபகாரியங்கள் விமரிசையாக நடந்தேறும். புதிய சுபப்பேச்சுகளையும் தற்போது தொடங்கலாம். பணியாளர்கள் சக ஊழியர்களிடம் வீண் நெருக்கம் பாராட்ட வேண்டாம். வியாபாரிகள் வியாபார விரிவாக்க முயற்சிகளை சில நாட்களுக்கு ஒத்திப் போடுவது நல்லது. வார இறுதியில் மறைமுக எதிரிகளின் ஆதிக்கம் இருக்கலாம். இச்சமயம் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது.

குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். மனைவி, மக்கள் அன்புமழை பொழிவர்.

அனுகூலமான நாட்கள்: மார்ச் 3, 5.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9.