ராசிபலன்

சிம்மம்

இன்றைய பலன்:

பொதுநலனில் அக்கறை கொண்ட நல்ல மனம் படைத்த ஒருவரை அடையாளம் காண்பீர்கள். அவருடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதில் தயக்கம் வேண்டாம். பணிகள் வேகம் காணும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7.
நிறம்: மஞ்சள், நீலம்.

வார பலன் :  19-1-2019 முதல் 25-1-2020 வரை

அன்புள்ள சிம்ம ராசிக்காரர்களே,

மாதக் கோள்களான புதனும் சூரியனும் ராசிக்கு 6ஆம் இடத்தில் சஞ்சரித்து அனுகூலங்களைத் தரு கின்றன. 3ஆம் இட சந்திரன், 5ஆம் இட குரு, 11ஆம் இட ராகு யோகப் பலன்களைத் தருவார்கள். 4ஆம் இட செவ்வாய், 5ஆம் இட சனி, கேது, 7ஆம் இட சுக்கிரனின் ஆதரவு கிடைக்கவில்லை.

தனிப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இன்முகத்துடன் வலம்வரக்கூடியவர்கள் நீங்கள். இவ்வாரம் ஈடுபட்ட காரியங்களில் பல செவ்வனே நடந்தேறும். ஒன்றிரண்டு பணிகள் தாமதப்படும் வாய்ப்பும் உண்டு. புதிய வாய்ப்புகளை ஏற்பது குறித்து உங்கள் நலன் விரும்பிகளிடம் உரிய ஆலோசனைகளைக் கேட்டுப் பெறவும். வருமான நிலை அமோகமாக இருக்கும். தேவைகள் குறைவின்றி நிறைவேறும். வாழ்க்கை வசதிகள் மட்டுமல்லாது சேமிப்புகளும் உயரும். முன்பே நிச்சயித்த சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும் என்பதுடன் புதிய சுபப் பேச்சுகளும் வளர்முகமாய் அமையும். நண்பர்கள் மூலம் சில காரியங்களை சாதித்துக்கொள்ளலாம். உறவினர்கள் நெருக்கம் பாராட்டுவர் என்றாலும் அவர்களுடனான கொடுக்கல் வாங்கல் விவகாரங்களைத் தவிர்த்திடுங்கள். குடும்பத்தார் நலமாக வலம் வருவது நிம்மதியைத் தரும். எனினும் உங்களது உடல்நலம் ஒரே சீராக இருக்காது. உடன்பிறந்தோருடனான சிறு கருத்து வேறுபாடுகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகளில் சில கிடைக்கும். வியாபாரம் ஏறுமுகமாக அமைந்திடும். வார இறுதியில் புதிய சிக்கல் ஒன்றை சந்திக்க நேரிடலாம். இச்சமயம் அமைதியாகவும் கவனமாகவும் செயல்படுவது நல்லது.

இல்லறத்தில் நிம்மதி இருக்கும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.

அனுகூலமான நாட்கள்: ஜனவரி 21, 22.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 7.