ராசிபலன்

மீனம்
இன்றைய பலன்:
மீனம் இன்று தேவை இன்றி உங்களது செயல்திட்டங்களை மாற்ற வேண்டாம். இன்று பொறுமை யாகச் செயல்பட்டீர்கள் எனில் கடினமான பணியையும் செய்து முடித்து ஆதாயம் காணலாம். சிறு தடைகளைச் சமாளிக்க நண்பர்கள் துணைநிற்பர்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4.
நிறம்: சிவப்பு, வெளிர்மஞ்சள்.
வார பலன் : 22-05-2022 முதல் 28-05-2022 வரை
அன்புள்ள மீன ராசிக்காரர்களே,
மாதக் கோளான சுக்கிரன் ராசிக்கு 2ஆம் இடம் வந்து அங்குள்ள புதனுடன் இணைந்து நலம்புரிவார். 3ஆம் இட சூரியன், 11ஆம் இட சனீஸ்வரன் ஏற்றங்களைத் தருவர். ராசியில் உள்ள குரு, செவ்வாய், 2ஆம் இட ராகு, 8ஆம் இட கேது, 12ஆம் இட சந்திரன் ஆகியோரால் நன்மைகள் இருக்காது.
எதையும் நேர்வழியில் சாதிக்கத் துடிக்கும் பண்பாளர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். தற்போது குருபலம் குறைந்திருப்பது உண்மைதான். எனினும், சனிபலம் தனிபலம் தரும். அடுத்து வரும் நாள்களில் உற்சாகமாக நடைபோடுவீர்கள். உடல், மனநலன் சிறப்பாக இருக்கும். பணிகளைச் சுறுசுறுப்பாக கவனிக்க இயலும். வரவுகளுக்குப் பஞ்சமில்லை. வழக்கமான தொகைகளைத் தவிர எதிர்பாராத ஆதாயமும் கிடைக்கும்போது வாழ்க்கை வசதிகளுக்கு என்ன குறை இருக்க முடியும்? பிறருக்கும் பொருளுதவி செய்து மனநிறைவு காண்பீர்கள். வீண் விரயம் கட்டுப்பட்டிருப்பது நிம்மதி தரும். நட்பு வட்டாரத்தில் புதிய நபர்கள் இணையும் வாய்ப்பு உண்டு. பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. பணிச்சுமை அதிகம் என்பதால் முக்கிய பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பது நல்லது. மங்கலப் பேச்சுகள், சொத்துகள் தொடர்பில் சிறு தடைகள் முளைக்கக்கூடும். குருபலம் கூடும்போது அவை தன்னால் முன்னேற்றம் காணும். பணியாளர்களில் ஒருசிலருக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் விறுவிறுப்பு காணும். வார இறுதியில் மறைமுக எதிரிகளின் ஆதிக்கம் இருக்கலாம். இச்சமயம் புதியவர்களுடன் வீண் நெருக்கம் பாராட்டுவது என்பது கூடாது. வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
இல்லறம் நல்லறமாகத் திகழும். பிள்ளைகள் ஏற்றம் காண்பர்.
அனுகூலமான நாள்கள்: மே 22, 23.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7.