ராசிபலன்

தனுசு

இன்றைய பலன்:

உங்கள் மனதை உறுத்திக் கொண்டிருந்த குழப்பம் அல்லது சந்தேகம் ஒன்று முடிவுக்கு வரும் வாய்ப்புண்டு. அந்த வகையில் நிம்மதியாக நடைபோடுவீர்கள். எதிர்பாராத ஆதாயங்களைப் பெற்று மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4.
நிறம்: பச்சை, இளஞ்சிவப்பு.

வார பலன் :  1-3-2020 முதல் 7-3-2020 வரை

அன்புள்ள தனுசு ராசிக்காரர்களே,

மாதக் கோள்களான புதன் ராசிக்கு 2ஆம் இடத்திலும், சூரியன் 3ஆம் இடத்திலும், சுக்கிரன் 4ஆம் இடத்திலும் சஞ்சரித்து அனுகூலங்களைத் தருகின்றன. 5ஆம் இட சந்திரனால் நலமுண்டு.

ராசியிலுள்ள குரு, செவ்வாய், கேது, 2ஆம் இட சனி, 7ஆம் இட ராகுவின் சுபத்தன்மை கெட்டிருக்கும்.

எந்தவொரு காரியத்தையும் ஈடுபட்ட வேகத்தில் செய்து முடிக்கக்கூடிய திறமைசாலிகள் நீங்கள். இவ்வாரம் மத்திமப் பலன்களைப் பெறுவீர்கள். அடுத்து வரும் நாட்களில் வருமான நிலை குறித்த கவலை வேண்டாம். உங்களுக்கான வழக்கமான தொகைகளில் பெரும்பாலானவை குறித்த நேரத்தில் கைக்கு வந்து சேரும். மறுபக்கம் செலவுகள் கணிசமாக ஏற்றம் காண வாய்ப்புண்டு.

தற்போது உடல்நலனில் கூடுதல் கவனம் தேவை. அன்றாட ஓட்டத்தில் வயிற்று வலி, உடற்சோர்வு, தலைவலி என்று ஏதேனும் உபாதைகள் தோன்றி மறைந்தபடி இருக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உட னுக்குடன் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. கூடுமானவரை பயணங்களைத் தவிர்த்தி டுங்கள்.

காரியத் தடைகள் அதிகமாகவே இருக்கும். எனவே வேலைகளைச் செய்யும் போது கூடுதல் முனைப்பும் கவனமும் தேவை. மிகச் சுலபம் என்று கருதும் பணிகளையும் கூட திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். உதவிகளை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். நீண்ட நாள் வழக்குகள் வழக்கம் போல் இழுத்தடிக்கும். பணியாளர்களுக்கு பொறுப்புகள் கூடும்.

அகலக்கால் வைக்கும் முயற்சியை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும். வார இறுதியில் சாதகமான தகவல்கள் தேடி வரும். இச்சமயம் சிறு வரவுகளுக்கு வாய்ப்புள்ளது.

வீட்டில் வழக்கமான சூழ்நிலை இருக்கும். பெற்றோர் உடல்நலனில் கூடுதல் கவனம் தேவை.

அனுகூலமான நாட்கள்:  மார்ச் 4, 6.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7.