ராசிபலன்

மேஷம்

இன்றைய பலன்:

மேஷம் நீண்ட நாள்களாக மன உளைச்சலை ஏற்படுத்திய விவகாரங்களுக்கு தீர்வு காண முடியும். இன்று பெரியவர்கள் உங்களை வழிநடத்துவர்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3 நிறம்: ஊதா, வெண்மை

வாரப் பலன்:

அன்­புள்ள மேஷ ராசிக்­கா­ரர்­களே,

ஆண்டுக்கோள்களான கேதுவும் சனியும் சிறப்பாக செயல்படுகின்றன. புதன், சந்திரன், சுக்கிரன் நலம்புரிவர். செவ்வாய், சூரியன், ராகுவின் ஆதரவு இல்லை. குருவால் நன்மை, தொல்லை இருக்காது.

எத்தகைய சூழ்நிலையிலும் குறுக்கு வழிகளை நாடாதவர்கள் நீங்கள். அடுத்து வரும் நாள்களில் உங்கள் இயல்புக்கு ஏற்ப நேர்வழியில் நடைபோடுங்கள். பொருளாதார ரீதியில் வலுவாக உணர்வீர்கள். வழக்கமான தொகைகள் உரிய நேரத்தில் தேடி வரும். மறுபக்கம் செலவுகள் கட்டுப்பட்டிருக்கும். திட்டமிட்டுச் செயல்பட்டீர்கள் எனில் அனைத்தையும் ஈடுகட்டி சிறு தொகையை சேமிக்கவும் முடியும். இவ்வாரம் திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிக்க அதிகம் சிரமப்பட மாட்டீர்கள். எனினும் சில எதிர்பாராத இடையூறுகள் ஏற்படலாம். எனவே கவனமாக இருந்தீர்கள் எனில் உங்கள் முன்னேற்றத்தை தடுக்க இயலாது. உடல்நலம் குறித்து எந்தவித கவலையும் வேண்டாம். வழக்கமான வேகத்துடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட இயலும். எனினும் ஆதாயங்களுக்கு ஆசைப்பட்டு அலைந்து திரிவது கூடாது. பணியாளர்களும் வியாபாரிகளும் ஏற்றம் காண்பர். வார இறுதியில் திடீர் சிக்கல்கள் ஏற்படக்கூடும். இச்சமயம் பணவிவகாரங்களில் எச்சரிக்கை தேவை.

குடும்பத்தார் இடையே நல்லிணக்கம் இருக்கும். பெற்றோர் நல்ல அறிவுரைகளைக் கூறி வழிநடத்துவர்.

அனுகூலமான நாள்கள்: ஏப்ரல் 29, 30

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5