ராசிபலன்

சிம்மம்

இன்றைய பலன்:

சிம்மம் நெருக்கமானவர்களுக்காகச் சில விஷயங்களில் விட்டுக்கொடுத்துப் போக வேண்டி இருக்கும். இன்று இதில் தயக்கம் வேண்டாம். வரவுகள் இனிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 7 நிறம்: நீலம், மஞசள்

வாரப் பலன்:

அன்­புள்ள சிம்ம ராசிக்­கா­ரர்­களே,

இவ்வாரம் சந்திரனின் சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. புதன், சூரியன், சுக்கிரனின் ஆதரவைப் பெறலாம். குருவருள் கிடைத்திடும். சனி, ராகு, கேது, செவ்வாயின் ஆதரவு இல்லை.

இறை நம்பிக்கை வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கும் என நம்புபவர்கள் நீங்கள். இவ்வாரம் மனதில் சிறு குழப்பங்கள் தோன்றி மறையக்கூடும். இதைச் செய்யலமா அதைச் செய்யலாமா என மனம் கிடந்து அல்லாடும். எனினும் உங்கள் இயல்புக்கேற்ப கடுமையாக உழைத்தீர்கள் எனில் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. ஒரு பக்கம் குருவின் ஆதரவுள்ள நிலையில், மறுபக்கம் சனியால் தொல்லைகள் இருக்காது. பொருளியல் ரீதியில் ஏற்றம் உண்டாகும். கடன்கள் இருப்பின் அவை பைசலாகும். உங்களுக்கே உரிய சுறுசுறுப்புடன் வலம் வருவீர்கள் என்றாலும் சிறு உடல் கோளாறுகள் ஏற்படவே செய்யும். அலைச்சல் மிகுந்த பயணங்களை முற்றிலும் தவிர்க்கவும். சில சந்திப்புகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். மங்கலப் பேச்சுவார்த்தைகள் வளர்முகமாக அமையும். நீண்ட நாள் வழக்குகள் நல்ல முடிவை எட்டக்கூடும். புதுப் பொருள்கள், சொத்துகள் சேர்க்கை உண்டாகும். பயணங்களை மேற்கொள்ளும் முன் அவற்றால் ஆதாயம் இருக்குமா என உறுதி செய்துகொள்வது நல்லது. பணியாளர்களுக்கு சவால் மிகுந்த பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல நுணுக்கங்கள் புரிபடும். வார இறுதியில் தனிப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இச்சமயம் யாருக்கும் பிணைக்கையெழுத்திட வேண்டாம். 

குடும்பத்தில் அமைதி நிலவும். மனைவி, மக்கள் அன்பு பொழிவர்.

அனுகூலமான நாள்கள்: ஏப்ரல் 30, மே 2

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5