ராசிபலன்

துலாம்

இன்றைய பலன்:

துலாம் செயல் திட்டங்களை மாற்றுவதில் தவறில்லை. முக்கியமான பணிகளை முடித்தீர்களா என்பதுதான் முக்கியம். வரவுகள் சுமார்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7 நிறம்: நீலம், வெண்மை

வாரப் பலன்:

அன்­புள்ள துலா ராசிக்­கா­ரர்­களே,

ஆண்டுக்கோள்களான குரு, ராகு மேன்மையான பலன்களைத் தருகின்றன. புதன், சந்திரன், செவ்வாய் நலம்புரிவர். கேது, சூரியன், சுக்கிரன், சனியின் ஆதரவு இல்லை.

உழைப்பை மட்டுமே நம்பி செயல்படக்கூடிய பக்குவசாலிகள் நீங்கள். இவ்வாரம் கோள்களின் அமைப்புகளை ஆராய்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் உழைக்கும் ஒவ்வொரு நொடியும் ஆதாயங்கள் தேடி வரும். குருவும் ராகுவும் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கப்போவது உறுதி. இவ்வாரம் உங்களுக்குரிய பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்கமான பணிகள் உரிய நேரத்தில் நடந்தேறும். தடைகளுக்குப் பஞ்சமிருக்காது. உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம். எனினும் விடாமுயற்சி, தெய்வ அருளால் வெற்றியை வசப்படுத்துவீர்கள். புது முயற்சிகள், பயணங்கள், புது முதலீடுகள் தொடர்பான நடவடிக்கைகளில் நிதானம் தேவை. உடல்நலம் நன்றாக இருக்கும். எனினும் சில உடல் கோளாறுகள் ஏற்படும்போது மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது அவசியம். வரவுகள் சற்றே அதிகரிக்கும் வாய்ப்புண்டு. மறுபக்கம் செலவுகளும் வரிசைகட்டி நிற்கும். சுற்றி இருப்பவர்களில் சிலர் பலவிதமாக குழப்பக்கூடும். பணியாளர்கள் பலநாள் உழைப்புக்குரிய பரிசாக தற்போது ஆதாயங்களைப் பெற்று மகிழ்வர். வியாபாரம் சிக்கலின்றி நடந்தேறும். வார இறுதியில் மனதில் நல்ல சிந்தனைகள் தோன்றும். தெளிவாகவும் திட்டமிட்டும் செயல்பட்டு ஆதாயம் அடைவீர்கள்.

குடும்பத்தார் இடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகள் பளிச்சிடும்.

அனுகூலமான நாள்கள்: ஏப்ரல் 29, 30

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4