ராசிபலன்

விருச்சிகம்

இன்றைய பலன்:

விருச்சிகம் நீண்ட நாள்களுக்குப் பிறகு சிலரைச் சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். இன்று அளவோடுப் பேசுவது நன்மை பயக்கும். வரவுகள் உண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 9 நிறம்: ஊதா, மஞ்சள்

வாரப் பலன்:

அன்­புள்ள விருச்­சிக ராசிக்­கா­ரர்­களே,

இவ்வாரம் சந்திரனின் சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. சுக்கிரன், புதன், சூரியன், கேது நற்பலன்களைத் தருவார்கள். சனி, ராகு, செவ்வாயால் நலமில்லை. குரு வலுவிழந்திருப்பார்.

தோல்விகளைக் கண்டு துவளாதவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் இந்த இயல்புதான் உங்களை நம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் எனலாம். வேலைப்பளு அதிகரிக்கும் நேரம் இது. வழக்கமானவை, சவால்மிக்கவை எனப் பலவிதமான பணிகள் காத்திருக்கும். எதை முதலில் செய்வது, எதைத் தள்ளிப்போடுவது என்று முடிவெடுப்பதில் இழுபறி ஏற்படும். போதாத குறைக்கு காரியத் தடைகளும் மிகுந்திருக்கலாம். இச்சமயம் எதற்காகவும் கலங்காமல் நம்பிக்கையுடன் முயற்சிகளைத் தீவிரப்படுத்துங்கள். விடாமுயற்சியும் உழைப்பும் வெற்றி தரும் எனத் தனியே சொல்லத் தேவையில்லை. புது முயற்சிகள், நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். வழக்குகள், மங்கலப் பேச்சுகளில் இழுபறி நீடிக்கும். வருமானம் சுமார் எனச்சொல்லும்படி இருக்கும். வழக்கமான தொகைகள் கிட்டும் எனில் செலவுகளும் வழக்கம் போல் அணிவகுத்து நிற்கும். உடல்நலம் பொதுவாக நன்றாக இருக்கும். உடல் கோளாறுகளைக் கண்டு அஞ்சுவதைவிட உரிய மருத்துவத்தை நாடுவது நல்லது. பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்திடும். வியாபாரிகள் கடமையே கண்ணாகச் செயல்பட வேண்டும். இவ்வாரத்தின் இறுதியில் சூழ்நிலை சாதகமாகும். இச்சமயம் பண விவகாரங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் இயல்புநிலை இருக்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பர்.

அனுகூலமான நாள்கள்: மே 3, 4

அதிர்ஷ்ட எண்கள்: 4, 9