ராசிபலன்

தனுசு

இன்றைய பலன்:

தனுசு நம்பகமானவர்களுடன் இணைந்து செயல்படவும். இன்று வெளி வேலைகள் அதிகரிக்கும். தடைகளை எளிதில் சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

வாரப் பலன்:

அன்­புள்ள தனுசு ராசிக்­கா­ரர்­களே,

மாதக்கோள்களான புதன், சுக்கிரனின் அருளைப் பெறலாம். குரு, சனிபலம் கிடைத்திடும். சந்திரனால் நலமுண்டு. செவ்வாய், ராகு, கேது, சூரியனின் ஆதரவில்லை.

வாழ்க்கையில் பெரும் இலக்குகளைக் கொண்டிருப்பவர்கள் என உங்களைக் குறிப்பிடலாம். இவ்வாரம் வாழ்க்கை வாழ்வதற்கே என்று உற்சாகமாக நடைபோடுவீர்கள். எதிரிகளும்கூட உங்களிடம் அடங்கிக் கிடப்பர். சுற்று வட்டாரத்தில் உங்களது செல்வாக்கும் சொல்வாக்கும் ஏற்றம் காணும். ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். தடைகள், சிக்கல்கள் குறுக்கிடும் என்றாலும் அனைத்தையும் கடந்திடுவீர்கள். எதிலும் வெற்றி உங்கள் வசமாகும். அடுத்து வரும் நாள்களில் பொருளியில் ரீதியில் எந்தச் சிக்கலும் எழாது. வழக்கமான வருமானம் தேடிவரும். சிலருக்கு திடீர் தொகைகள் கிட்டும். புதிய பொருள்களின் சேர்க்கைக்கு வழியுண்டு. யாருக்கும் எதற்காகவும் பிணைக் கையெழுத்திட வேண்டாம். சொத்துகள் தொடர்பான முயற்சிகளில் நிதானம் தேவை. உடல்நலம் நன்றாக இருக்கும். ஓடியாடி உழைத்தாலும் சோர்வு தட்டாது. பணியாளர்களுக்கு புதிய பொறுப்புகள் சேர்ந்துகொள்ளும். வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயங்களைப் பெற்று மகிழ்வர். இவ்வாரத்தின் இறுதியில் தனிப்பட்ட விருப்பங்கள் நிறைவேறக்கூடும். இச்சமயம் எதிரிகளின் போக்கை கவனித்துச் செயல்படுங்கள். குடும்பத்தில் சிறு குறையும் இல்லை. மனைவி, மக்கள் ஆதரவாக இருப்பர்.

அனுகூலமான நாள்கள்: ஏப்ரல் 28, 29

அதிர்ஷ்ட எண்கள்: 4, 8